Sunday, March 22, 2020

பெந்தெகொஸ்தே என்னும் நாள்

பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்த போது அவர்களெல்லோரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். அப்போஸ்தலர் 2:1

1. #பெந்தெகொஸ்தே என்னும் நாள்
2. அவர்கள் #எல்லாரும்
3. #ஓரிடம்
4. #ஒருமனம்
5. #வந்திருந்தார்கள்

1. #பெந்தெகொஸ்தே #என்னும் #நாள்:-
  ------------------------------------------------------------------
ஆராதிக்கிற நாள் மிகவும் முக்கியம்.  பெந்தகொஸ்தே என்னும் நாள் வந்தபோது என்று ஒரு நாளை குறிப்பிடுகிறதை பார்க்கிறோம் Act 2:1. கர்த்தருடைய நாளிலே அப்போஸ்தலனாகிய யோவான் ஆவிக்குள்ளானான் வெளி 1:10. அது எந்த இடம் என்றால்  பத்மு என்ற  தீவு. ஓய்வு நாளுக்கு ஆண்டவராயிருக்கிற இயேசு கிறிஸ்துவே ஓய்வுநாள் தோறும் தேவாவலயங்களுக்கு போனார் என்று வேதத்திலே படிக்கிறோம். லூக்கா 13:10

2.#அவர்கள் #எல்லாரும் :-
----------------------------------------
பெந்தகொஸ்தே நாளுக்கு முன் 120 பேர் இருந்தார்கள் அவர்கள் எல்லாரும் கூடி வந்தார்கள் அப்போஸ்தலர்  1:15. அப்படியானால் ஒரு சபையிலே எவ்வளவு பேர் இருந்தாலும் ஆராதனைக்கு வரனும். குறிப்பாக ஆராதனை ஸ்தலத்துக்கு வரவேண்டும். முதலாம் நூற்றாண்டு விசுவாசிகள் முதாவது எருசலேம் தேவாலத்திலே கூடி வந்தார்கள். அவர்களுக்கு  ஆராதனை ஸ்தலம் இல்லாததால் வீடுகள் தோறும் கூடி தேவனை ஆராதித்தார்கள்  Act 2:46.
     இன்றைய சூழ்நிலை அப்படி இல்லையே எது இருக்கோ இல்லையோ ஆலயம் நல்லா கட்டி [பூட்டி ] வெச்சிருக்கோமே! கிராமங்களில் கூட கர்த்தரை ஆராதிக்க நல்ல ஆலயம் இருக்கிறதே!

3. #ஓரிடம் #மேலறை :-
---------------------------------
எல்லோரும் கூடி வர ஆராதிக்க, ஆராதிக்கிற இடம் முக்கியம்.
ஆண்டவர் மோசேயிடம் சொன்னார். நான் வாசம் பண்ண எனக்கு ஓரு வாசஸ்தலத்தை உண்டு பண்ணுவாயாக என்று Exo 25:8,
    இருக்கிற இடத்திலேயே! அல்லது வீட்டிலேயே! டிவிக்கு முன்னாடி! அல்லது ஆன் லைனில் கர்த்தரை ஆராதிக்காலாம் என்று சொல்லுவது,  இதெல்லாம் மனுஷனுடைய ஆலோசனை. சூல்நிலைக்கு தகுந்தது போல மாற்றிக்கொள்ளுகிற காரியம். பத்திரத்துக்கு கையெழுத்து ஆகிவிட்டது என்று அறிந்தும் தானியேல் பலகணிகளை திறந்து எருசலேமுக்கு நேராக தான் முன் செய்து வந்த படியே தேவனை நோக்கி ஜெபம் செய்தான் தானியேல் 6:10. சிங்க கெபிக்கு தானியேல் பயப்படல. சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோகூட ஏழு மடங்கு அக்கினி சூழைக்கு பயந்து ராஜாவின் பொற்சிலையை வணங்க வில்லை தானியேல் 3:18. அப்போஸ்தலர்களிடம் இயேசுவின் நாமத்தை பற்றி பேசவும் போதிக்கவும் கூடாதென்று கட்டளையிட்டபோது அதற்கு அப்போஸ்தலர்கள் தேவனுக்கு செவிகொடுக்கிறதை பார்க்கிலும்  உங்களுக்கு  செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமா என்று நீங்களே நிதானித்து பாருங்கள் என்று தையரியமாக சொன்னார்கள் Act4:19. தேவன் ஆபிராமிடம் மோரியா தேசத்துக்கு போய் நான் குறிக்கும் இடத்திலே உன் குமாரன் ஈசாக்கை பலியிடு என்று குறிப்பிட்டு சொல்லக் காரணமென்ன? ஆதி 22:2

4.#ஒருமனம்
----------------------
 இங்கே ஒருமனம் என்ற வார்த்தையை பார்க்கிறோம். குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் எல்லாரும் கூடி வந்தால் மட்டும் போதாது. அங்கே ஆவியானவரின் கிரியை, தேவபிரசன்னம், தேவ மகிமை, தேவ வல்லமை, அற்புத அடையாளங்கள் நடைபெற  வேண்டுமென்றால் எல்லாருக்கும் ஓரேமனம் வேண்டும்.
முதலாம் நூற்றாண்டின் சபை வெற்றிக்கு காரணம் அவர்கள் எல்லாருக்கும் ஒரே இருதயம் ஒரே மனமும் இருந்தது. அப்போ  4:32. சீஷர்கள் ஒரு காரியத்துக்காக எல்லாரும் ஓரிடத்திலே கூடி ஜெபித்தார்கள். அவர்கள் கூடி இருந்த இடம் அசைந்தது அப்போ 4:30,31. பேதுரு சிறைச்சாலையில் இருந்தபோது சபையார் ஊக்கத்தோடு ஜெபித்தபோது அப்போ 12:5, பேதுருவை தேவ தூதர் அற்புதமாக சிறைச்சாலையில் இருந்து வெளியே கொண்டு வந்ததை பார்க்கிறோம் அப்போ 12:10.

5. #வந்திருந்தார்கள் #சபைக்கு
----------------------------------------------------
 ஆலயத்திலே வந்து தான் தேவனை ஆராதிக்க வேண்டும். ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணிமணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள் Act 3:1.
தேவன் தனக்கு நன்றி சொல்லும் வண்ணமாக பெத்தேலலில் பலிபீடம் கட்டச் சொன்னபோது;
யாக்கோபு தன் வீட்டாரை பார்த்து எழுந்து உங்களை சுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்.
நாம் எழுந்து பெத்தேலுக்கு போய் நமக்கு ஆபத்து நேரிட்ட நாளில் உதவி செய்த தேவனுக்கு பலிபீடம் கட்டவேண்டும் என்று தன் குடும்பத்தாரை ஆயத்தம் பண்ணினான் Exo 35: 1,2,3. நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்று பக்தன் இயேசுவா கூறுகிறார் யோசுவா 24:15 .
உலகத்துக்கு பிரசங்கம் செய்த நோவா  ஒருவரையும் இரட்சிக்க முடியாவிட்டாலும்  தன் குடும்பத்தை பேழைக்குள் வைத்து காக்க ஒரு பேழைச் செய்தான் ஆதி 7:1. நீ ஏழையாய் இருந்தாலும் பேழையை [சபை, பரலோகம்] இழந்த கோழையாகிடாதே!
 மேலும் நாளானது சமீபித்திருக்கிறதை அறிந்திருக்கிறுக்கும் போது,  சபைகூடி வருகிறதை சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல் ஒருவருக்கொருவர் புத்திச்சொல்லக்கடவோம் எதி 10:25.
 சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.  ஆமென் =