Friday, April 7, 2017

எல்லா நடுவர்களையும் போன் போட்டு கலாய்க்கும் #அந்த ஒரு தீவிரமான ரசிகன்























New Idea for Bathing ... What an Idea Sirg


















Must Watch if you have Children - தவறாது அனைவரும் ஒரு தடவை காணவேண்டிய கா...



















அரங்கை அதிரவைத்த அண்ணன் - Arangai athiravaitha annan - சிரிப்புடா பருப்...
















கேப்மாரி - TTV Dhnakaran இன்று முதல் நீ கேப்மாரி என்று அழைக்கப்படுவாய்...























Sunday, April 2, 2017

தமிழ்நாட்டின் கதி என்ன? நம் இளைஞர்கள் எங்கே?

மாத்தூர் தொட்டிப் பாலம் பயணம் - Mathur Thottipalam



மாத்தூர் தொட்டிப் பாலம் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப் பாலமாகும். இது மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான் பாறை என்ற மலையையும்கூட்டுவாயுப்பாறை என்ற மலையையும் இணைத்து பறளியாற்றுத் தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ளது.


மாத்தூர் என்னும் கிராமம் திருவட்டாற்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலையிலும்,இந்தியாவின் தென்முனையாகிய கன்னியாகுமரியிலிருந்து 60 கி.மீ. தொலையிலும் நாகர்கோவிலில் இருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இவ்வூர் குழித்துறை இரயில் நிலையத்திலிருந்து 15 கி.மீ. தொலையிலும்திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 70 கி.மீ. தொலையிலும் அமைந்திருக்கிறது.


பாலத்தின் சிறப்பியல்புகள்:
இரண்டு மலைகளை இணைக்கும் இந்தப் பாலம் நீளவாக்கில் 1204 அடியாகவும்,தரைமட்டத்திலுருந்து 104 அடி உயரத்திலும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு தூணின் சுற்றளவும் 32 அடியாகும். இவ்வாறு மொத்தம் 28தூண்கள் உள்ளன. பெரிய பெரிய தொட்டிகளாக தொகுக்கப்பட்டு தண்ணீர் செல்லும் பகுதிகள் ஏழு அடி அகலமாகவும்ஏழு அடி உயரமும் உயரமாகவும் காணப்படுகிறது.

பெயர் காரணம்:
தொட்டி வடிவில் கட்டப்பட்டிருப்பதால் தொட்டிப்பாலம் எனவும் இரு மலைகளுக்கு நடுவே தொட்டில் போன்ற அமைப்பில் இருப்பதால் தொட்டில்பாலம் எனவும் அழைக்கப்படுகிறது. இப்பாலத்தின் நடுப்பகுதிக்கு சென்று கீழே பார்த்தால் ஆற்று நீரும் அதனைக் கடக்க ஒரு சாலையும் அழகாகக் காட்சியளிக்கிறது. அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது.

மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம்விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர்களின் நீர்ப்பாசனத்திற்குப் பயன்படுகிறது.

நன்றி: விக்கிபீடியா
                               மாத்தூர் தொட்டிப் பாலம் கீழாக ஓடும் ஆறு

நம் நாட்டின் இருக்கும் மாத்தூர் தொட்டிப் பாலம்!! ஆசியாவிலே மிகவும் உயரம் ஆனதும் நீளமானதுமான மாத்தூர் தொட்டிப்பாலம்,  பார்க்குமிடங்களெல்லாம்  நெருக்கமாகக் காணப்படும் தென்னை மரங்கள்.... கோடைக் காலத்திலும் வற்றாத ஆறுகளெனகேரளத்தின் சாயலோடு காணப்படும் மலைப் பாங்கான பிரதேசம் மாத்தூராகும். தென் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயிலுக்கு அருகில் மாத்தூர் அமைந்திருக்கிறது.
           
ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலையையும் இணைத்துபறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே இப்பாலம் அமைந்துள்ளது.

தரைமட்டத்திலிருந்து ஏறத்தாழ 115 அடி உயரத்திலே நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலத்தின் நீளம் 1240 அடி( 1 கி.மீ) நீளமுடையது. 40 அடி இடைத்தூரத்தில் அமைக்கப்பட்ட 28இராட்சதத்தூண்கள் இந்தப் பாலத்தைத் தாங்குகின்றன.

பறளியாற்றின் நீரானது 7 அடி உயரமும் 7 அடி அகலமுமுடைய பெரிய தொட்டிகளாகக் தொடுக்கப்பட்ட பகுதியால் கொண்டு செல்லப்படுகிறது. இரு மலைகளுக்கு நடுவில் தொட்டில் போன்ற அமைப்புடன் காணப்படுவதால் தொட்டில் பாலமெனவும் இப்பாலம் அழைக்கப்படுகிறது.


<== கீழாக செல்வதற்க்கு உள்ள படிக்கட்டு

சக்கர நாற்காலியொன்று செல்லக்கூடிய அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியினூடாக பாலத்தின் ஒரு முனையிலிருந்து மறு பகுதிக்குச் செல்லமுடியும் . இரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னைரப்பர் மரங்கள்நீல வானம்,சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே தெரியும் காட்சியை
விவரிக்க எவரிடமும் வார்த்தைகளிருக்காது தான்.

பாலத்தின் மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதிநடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் கற்பனை செய்தால்நமது கட்டுப்பாடின்றியே கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும்
கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.

வெளியான இடமொன்றில் 115 அடி உயரத்திலிருந்து இயற்கையை ரசிப்பது கூட ஒரு சுகமான வித்தியாசமான அனுபவம் தான். இயற்கையின் அருள் மழையில் நனைந்தபடியே பாலத்தின் மறு முனை அடைந்தால் பார்க்குமிடங்களில் எல்லாம் ரப்பர் தோட்டங்கள் மட்டுமே தெரியும். தோட்டங்களில் உள்ள ரப்பர் மரங்களினிடையே சிறிய பெட்டிகள் காணப்பட்டன. ரப்பர்த் தோட்டங்களிலேயே சிறு கைத்தொழில் முயற்சியாகதேனீ வளர்ப்பும் இடம்பெறுவது தெரிந்தது. ரப்பர் மரங்களின் பூக்கும் காலத்தை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கைத்தொழில் முயற்சி நடைபெறுகிறது. வீட்டுக்கு வீடு சுற்று சுவர் போன்று அன்னாச்சி பழம் செடி உள்ளது.போகும் வழியாவும் செடி கொடிகளால் கேரளாவின் தனி அழகில் நாஞ்சில் நாடு காட்சி தருகின்றது.

ஆரம்பித்த இடத்துக்கு மீண்டும் வர இரு வழிகள் இருக்கின்றன. வந்த பாதையினாலே அதாவது தொட்டிப் பாலத்தின் மேற் பகுதியாலேயே திரும்பி வரலாம். அல்லதுபாலத்தின் அருகிலேயுள்ள படிக்கட்டுக்களால் திரும்பி வரலாம். பாலம் முடிவடையுமிடத்திலே தொடங்கும் படிக்கட்டுக்களின் வழியே குறிப்பிட்ட ஆழம் வரை இயங்கிப் பின் அங்கே அமைக்கப்பட்டுள்ள சுழல் படிக்கட்டுக்களின் வழியே ஆரம்பித்த இடத்தைச் சென்றடையலாம்.

பாலத்தில் இருந்து கீழ் பக்கம் இருக்கும் நதியின் கரையில் இறங்கி செல்ல படிகளிலான பாதை உண்டு. அங்கு குழந்தைகளுக்கு விளையாட என ஒரு சிறிய பூங்காவும் பாதுகாக்கின்றனர் . சில தமிழ் படங்கள் இப்பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் உற்சாகமான
நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு நடந்து செல்கின்றனர். மேற்க்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் ஆகும் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத் தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு இந்த சூழலின் வழி நெடுகிலும் பூந்தோட்டங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பாலத்தைப் பார்வையிடகட்டணம் எதுவும்  வசூலிக்கப்படுவதில்லை.


இந்தப் பாலம் 1966 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஒரு காலத்திலே கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடுகல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்தன. அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும். அவரது பதவிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் அக்காலம் முடிவடைந்த பின்னரும் தொடரப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர். படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் இருந்தால்உலக நாடுகள் யாவும் இன்று ஒரே நிலையில் இருந்திருக்கும்.

மாத்தூர் தொட்டிப் பாலத்தின் பயனாக பல ஹெக்டர் விவசாய நிலங்கள் பயன் பெறத் தொடங்கின. தரிசு நிலங்கள் பல விவசாய நிலங்களாகின. கன்னியாகுமரி மாவட்டம் விவசாயத்தில் தன்னிறைவு கண்டது






நீங்கள் வருகை தந்துள்ளமைக்கு சான்றாக தங்களின் ஆக்கபூர்வமானதும் நாகரிகமானதுமான கருத்துக்களை இங்கே பகிரவும்!

நன்றி!!!

கன்னியாகுமரி மாவட்டம்



கன்னியாகுமரி மாவட்டம், (ஆங்கிலம்: Kanyakumari district) தமிழ் நாட்டின் முப்பத்திரண்டு மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. நாகர்கோவில்பத்மநாபபுரம்குளச்சல்குழித்துறை என 4 நகரங்கள் உள்ளன.
தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது.
இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலமும், வடக்கிலும், கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளது.
2006 டிசம்பர் 26 அன்று தெற்காசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கடற் பகுதிகளை கடுமையாகத் தாக்கிய சுனாமிப் பேரலை இம்மாவட்டத்தையும் பெரும் அழிவிற்கு உள்ளாக்கியது.

வரலாறு[தொகு]

கன்னியாகுமரி என்ற பெயர் இப்பகுதியில் புகழ் பெற்ற குமரி அம்மன் என்னும் இந்து சமயக் கடவுளை மையப்படுத்தும் தல புராணத்திலிருந்து இம்மாவட்டத்துக்கு கிடைத்திருக்கிறது. இது பார்வதி தேவி தன்னுடைய ஒரு அவதாரத்தில் 'குமரிப் பகவதி' என்னும் பெயருடன் சிவனை சேரும் பொருட்டு இந்நிலப் பகுதியின் தென்கோடியில் அமைந்துள்ள ஒரு பாறையில் தவம் செய்ததாக கூறுகிறது.
சங்க காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளை ஆய் என்னும் சிற்றரசனே ஆண்டதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் பொதுவாக அழைக்கப்படும் 'நாஞ்சில் நாடு', 'இடை நாடு' ஆகிய பகுதிகளை இம்மாவட்டம் உள்ளடக்குகிறது. இப்பகுதியில் வயல்கள் அதிக அளவில் இருந்ததால், நிலத்தை (வயலை) உழ பயன்படும் நாஞ்சிலிலிருந்து (கலப்பை) இந்நிலப்பரப்புக்கு இப்பெயர் வந்தது என்பது பெயரியல் நிபுணர்களின் துணிபு. தற்போது அகத்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்களாக இருக்கும் நாஞ்சில் நாடு, பத்தாம் நூற்றாண்டின் முதற்பகுதி வரை பாண்டியர்களின் ஆட்சிப்பகுதியாக இருந்து பின் சேரர்கள் வசம் மற்றமடைந்ததாகத் தெரிகிறது.

கன்னியாகுமரியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம்
தற்போது கல்குளம்விளவங்கோடு வட்டங்களாக இருக்கும் இடை நாடு(வேணாடு), சேரர்கள் ஆட்சிப்பகுதியாக இருந்தது. பின் ஓய்சலயர்கள் மற்றும் மேற்கு சாளுக்கியர்களின் வளர்ச்சியினால் சேரர்கள் வலுவிழந்தனர். ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகள் வேணாட்டை ஆண்டு வந்த வீர மன்னர்கள், தொடர்ந்து பக்கத்து பாண்டிய மன்னர்களுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டு வந்ததால் விஜயநகர மன்னர்கள் இவர்களுக்கு எதிராகப் படையெடுத்தனர். இதன் விளைவாக, கன்னியாகுமரி, 1609- ஆம் ஆண்டு மதுரைவிஸ்வநாத நாயக்கரின் வலுவான கரங்களுக்குள்ளானது. இதன் விளைவாக 1634 வரை நாஞ்சில் நாட்டுக்கு எந்த விதமான வலுவான அச்சுறுத்தல்களும் இல்லாமல் இருந்தது. பின்னர் ரவி வர்மாமார்த்தாண்ட வர்மா, ஆகிய அரசர்களின் காலகட்டத்தில் வேணாடு கடும் உள்நாட்டுக் குழப்பங்களைச் சந்தித்தது. இதைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆற்காடு சந்தா சாகிபு நாஞ்சில் நாட்டைத் தாக்கினார். குளச்சல் போரில் மார்த்தாண்ட வர்மா டச்சு போர்வீரர்களை வெற்றி கொண்ட போதிலும் சந்தா சாகிபுவை சமாளிக்க முடியாததால் போர்க்களத்தை விட்டுப் பின்வாங்க வேண்டியிருந்தது. கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த பின் மலபார் பகுதியை ஆண்டு வந்த நம்பூதிரி-நாயர் கூட்டணி ஆட்சி வேணாட்டு அரசை கைப்பற்றியது. வேணாடு நம்பூதிரி-நாயர் கூட்டணியின் மன்னன் கார்த்திகை திருநாள் ராமவர்மனால் திருவிதாங்கூர் அரசாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மார்த்தாண்ட வர்மாவுக்கு பிறகு வந்த மன்னர்கள் அனைவரும் வலுவற்றவர்களாக இருந்ததால் ஆங்கிலேயர்களின் தலையீடு இந்நாட்டின் மீது அவ்வப்போது இருந்து வந்து, பின் படிப்படியாக அவர்களின் முழு கட்டுப்பாட்டுக்கு வந்த வேணாட்டை 1947 வரை அவர்களே ஆண்டு வந்தனர்.
பின் அது 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது. கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் தொடங்கியது. 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.
இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.


கன்னியாகுமரி மாவட்டம்
TN Districts Kanyakumari.png
கன்னியாகுமரி மாவட்டம்:அமைந்த இடம்
தலைநகரம்[[நாகர்கோவில்]]
மிகப்பெரிய நகரம்நாகர்கோவில்
ஆட்சியர்{{{ஆட்சியர்}}}
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

ஆக்கப்பட்ட நாள்1956
பரப்பளவு1,684 சகிமீ கி.மீ² (?வது)
மக்கள் தொகை
(2001
வருடம்
அடர்த்தி
18,70,374 (?வது)
1,111/கி.மீ²
வட்டங்கள்4
ஊராட்சி ஒன்றியங்கள்9
நகராட்சிகள்4
பேரூராட்சிகள்55
ஊராட்சிகள்90
வருவாய் கோட்டங்கள்2

மருத்துவ வரலாறு[தொகு]

இம்மாவட்டத்துக்கு இயற்கை பல அரிய மூலிகை வகைகளையும் தாது வளங்களையும் தாங்கும் மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு அருகாமையில் அமைந்திருக்கும் மருந்துவாழ் மலை அசோகர் காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும் ஆன்மீக பாரம்பரியம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana மலையின் உடைந்து விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.
மேலும் செந்தமிழின் முதல் இலக்கண ஆசிரியரும், முதல் சித்தருமான அகத்தியர் இந்நிலப்பரப்பின் எல்லையில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இப்பகுதியில் அகத்தீஸ்வரம் என்னும் ஊரும் உள்ளது. இவ்வூருக்கும் இப்பெயர் ஒரு குறு முனிவரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. இவ்வூரில் அகஸ்தீஸ்வரால், அகஸ்தீஸ்வரமுடையாருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு கோயிலுமுள்ளது. மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்மக்கலையிலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை எழுத்தாக்கங்களான வர்மாணிவர்மக்கலை ஆகியன அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறை|குரு-சிஷ்ய முறையில்]] கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

பண்பாடு[தொகு]

இம்மாவட்டத்தில் வாழ்கின்ற மக்களின் முதன்மை மொழி தமிழ் ஆகும். மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர். இந்த மாவட்டத்தில் பேசப்பட்டு வரும் வட்டாரத் தமிழ் சிறிது மலையாளம் கலந்து தனித்தன்மை கொண்டுள்ளது

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்துக்கள் 9,09,872 (48.65%); கிறித்தவர்கள் 8,76,299 (46.85%); இசுலாமியர்கள் 78,590 (4.20%); மற்றவர்கள் 0.30% ஆக உள்ளனர்.[7]
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய சமயமான அய்யாவழியின் பிறப்பிடமும் கன்னியாகுமரி மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது. மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மறை பரப்பாளர்கள் ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில் வலுவிழந்து காணப்படுகிறது.
இம்மாவட்டத்தின் மக்கள் சாதிமத இன, வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்கு 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. மண்டைக்காடு மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த மண்டைக்காடு கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக தெரிகிறது. மண்டைக்காடு கலவரத்தில் ராஜாக்கமங்கலம, ஈத்தாமொழி, பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.